search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் மழை"

    கெங்கவல்லி, மேட்டூர், காடையாம்பட்டி, ஆத்தூர், ஏற்காடு, வீரகனூர் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது.

    சேலம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. இன்று காலையில் இருந்து சாரல் மழை பெய்தது.

    குறிப்பாக கெங்கவல்லி, மேட்டூர், காடையாம்பட்டி, ஆத்தூர், ஏற்காடு, வீரகனூர் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதிகளில் உள்ள சுவேத நதி, வஷிஷ்ட நதி மற்றும் பல ஓடைகளிலும் தண்ணீர் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஆத்தூர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளன. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    ஏற்காட்டில் நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய மழை 3 மணி நேரம் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் ஏற்காட்டில் பெய்யும் தொடர் மழையால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

    கனமழையினால் மேட்டூரை அடுத்த வீரக்கல் புதூர் பேரூராட்சிக்குட்பட்ட புதுசாம்பள்ளி பகுதியில் 12-வது வார்டு மற்றும் 9-வது வார்டு பகுதிகளில் நேற்று இரவு மழைநீர் வடிகால் ஓடையில் குப்பை கூளங்கள் அடித்து வரப்பட்டு அடைப்பு ஏற்பட்டது இதனால் ஓடையை ஒட்டி அமைந்துள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

    வீரக்கல்புதூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு இது பற்றி தகவல் தெரிவித்தனர். நிர்வாக அதிகாரி நந்தகுமார் மேற்பார்வையில் பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து ஓடைகளில் அடித்து வந்த குப்பை கூளங்களை அகற்றி தண்ணீர் வழிந்து ஓட வழிவகை செய்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    சேலம் மாநகரில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று காலை வரை சாரல் மழையாக பெய்தது. ஏற்கனவே சேலம் மாநகரில் அழகாபுரம், சோனாநகர், பச்சப்பட்டி உள்பட பல பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில் இந்த மழையால் தண்ணீர் தேக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக கெங்கவல்லியில் 83.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மேட்டூர் 59.4, காடையாம்பட்டி 37, ஆத்தூர் 36.4, ஏற்காடு 31.4, வீரகனூர் 26, ஓமலூர் 17.1, ஆனைமடுவு 17, பெத்தநாயக்கன்பாளையம் 15, தம்மம்பட்டி 10, கரியகோவில் 9, சேலம் 4.4, எடப்பாடி 4, சங்ககிரி 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 352.30 மி.மீ. மழை பெய்துள்ளது.

    கஜா புயல் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் மழை பரவலாக பெய்தது. அப்போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    சேலம்:

    கஜா புயல் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் நேற்று பரவலாக பெய்தது. இதில் தம்மம்பட்டி, வீரகனூர், ஆத்தூர் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த மழையால் ஆத்தூர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோழப்பயிர்கள் தரையில் சாய்ந்தது. மாவட்டத்தில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டியை சேர்ந்த சின்னப்பையன். இவரது மனைவி சந்திரா (வயது 42). இவர்களது மகள் சத்யா (29)வுக்கு திருமணம் ஆகி விட்டது. மகன் பி.இ.படித்து வருகிறார்.

    சந்திரா நேற்றிரவு வீட்டருகே தென்னங்கீற்று முடையும் வேலையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த பகுதியில் பெய்த சாரல் மழையால் வீட்டின் சுவர் இடிந்து சந்திராவின் மீது விழுந்தது. இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சேலம் ஆர்.டி.ஒ.(பொறுப்பு) ஜெகநாதன் மற்றும் வருவாய் துறையினர் அந்த பகுதியில் விசாரணை நடத்தினர்.

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 97 மி.மீ. மழை பெய்துள்ளது. வீரகனூர் 41, ஆத்தூர் 28, கெங்கவல்லி 27, ஆனைமடுவு 23, பெத்தநாயக்கன் பாளையம் 22, ஏற்காடு, கரிய கோவிலில் 20.2, சங்ககிரி 19, மேட்டூர் 14.6, காடையாம்பட்டி 12, ஓமலூர் 11, எடப்பாடி 8.6, சேலம் 6.9, வாழப்பாடி 2.5 மி.மீ. மழை என மாவட்டம் முழுவதும் 353 மி.மீ. மழை பெய்துள்ளது.
    சேலத்தில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் 24 மணி நேரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளான். #SalemRain #SalemStudentBodyFound
    சேலம்:

    சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய பெய்த கனமழை பெய்தது. இதன் காரணமாக பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய தவித்தனர்.

    கிச்சிப்பாளையம் நாராயண நகரில் நேற்று அதிகாலையில் மழை பெய்துகொண்டிருந்தபோது சகோதரருடன் வந்த மாணவன் முகமது ஆசாத் (வயது 16) அங்குள்ள கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்தான். அவனை சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் அவனை மீட்க முடியவில்லை. அவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    மாணவன் தவறி விழுந்த ஓடை பகுதியை நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படும் மாணவனை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காக 7 குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

    இந்நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் 24 மணி நேரத்திற்குப் பிறகு இன்று காலை கருவாட்டுப் பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். #SalemRain #SalemStudentBodyFound
    ×